புதன், 26 ஆகஸ்ட், 2015

லட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடி


செல்வவளம் லட்சுமி வசியம் தரும் நவகிரக 
தூப பொடி

(share) செய்யுங்கள்)

1.அரசு, 2.மருதாணி, 3.கஸ்தூரி, 4.சாம்பிராணி, 
5.செந்நாயுருவி,
6.இலுப்பை, 7.புனுகு, 8.புங்கன், 9.முந்திரி, 
10.குங்கிலியம்,
11.வெள்ளெருகு, 12.ஏலக்காய், 13.வெண்கடுகு, 
14.கோராசனை, 15.கோஷ்டம், 16.நொச்சி, 
17.ரோஜா இதழ்,
18.ஆலமரம், 19.சந்தனம், 20.அகில், 21.தேவதாரு, 
22.துளசி 23.தாமரை

மெற்கண்ட 23 மூலிகைகளையும் சம அளவு 
எடுத்து சுத்தம் செய்து இடித்து 
தூளாக்கவும்,இந்த 
பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் 
இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால் 
கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள் 
உருவாகும்...செல்வவளம் உண்டாகும் தொழில் 
செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள் 
வ்சியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம் . 
சந்தோசம் எப்போதும் இருக்கும்...

இது நவகிரக தோசத்தை போக்கும்...செல்வாக்கு 
அதிகரிக்க செய்யும் வசியத்தை உண்டாக்கும் 
நினைத்தை அடைய செய்யும்..வீட்டில் 
தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு 
ஒப்பான பலன்களை தரும்.கோர்ட் கேஸ் 
பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் 
நோய் கிருமிகளை விரட்டி நோயாளிகளை 
குணப்படுத்தும்..குழந்தைகள் இருக்கும் வீட்டில் 
அவர்கள் ஆரோக்கியமாக வளர,கல்வி 
சிறப்பாக 
அமைய நினைவாற்றல் மேம்பட செய்யும் அரசு 
,ஆலம் துகள்கள் இருப்பதால் குருவருள் 
உண்டாகும் குரு தோசமும் விலகும். 
வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் 
நிவர்த்தியாகும்.தடைபட்ட சுபகாரியங்களும் 
உடனே நடக்கும்..

சம்பளம் கரையாமல் இருக்க !!!




சம்பளம் வாங்கியவுடன் கரைந்து விடாமல் இருக்க பரிகாரம்!!!

சம்பளம் சிலருக்கு வாங்கியது போல்தான் இருக்கும். வீட்டிற்க்கு செல்வதற்கு முன் ஏதாவது ஒரு வகையில் பணம் பாதி செலவழிந்து விடும். கையில் இருக்கும் பணமும் ஓரிரு நாட்களில் வேகமாக கரைந்து விடும், முதலில் சம்பளம் வாங்கியவுடன் மங்களம் தரும் பொருட்கள் ஏதாவது வாங்க வேண்டும். 

அப்போதுதான் செல்வம் கையில் தங்கும். ஏதாவது இனிப்பு, பால், மல்லிகைப்பூ, இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கினால் செல்வம் பெருகும். சம்பளமும் சிறிது சிறிதாக கரையும். மேலும் சேமிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி நம் பணம் நம்முடனே தங்குவதற்க்கு வழி பிறக்கும். சம்பளம் வாங்கியவுடன் அநாகரீகமான காரியத்திற்க்கு அப்பணத்தை செலவழித்தால் பணம் சீக்கிரம் கையை விட்டுப்போய்விடும்.

பணம் வாங்கியவுடன் முதன் முதலில் அசைவ உணவு சாப்பிடுவது நண்பர்களுக்கு அசைவ விருந்து வைப்பது, மது குடிப்பது, போன்றவைகளால் பணம் சீக்கிரம் கையை விட்டு போய்விடும். சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக வண்டிக்கு பெட்ரோல் போடக்கூடாது.

பெட்ரோல் போட நினைப்பவர்கள் உங்கள் பணத்தில் ஏதாவது இனிப்பு வாங்கி சாப்பிட்டோ அல்லது பால் வாங்கி சாப்பிட்டோ அதற்கு பின் பெட்ரோல் போடும்போது உங்கள் பணம் கையில் நிற்க்கும். இல்லையென்றால் மாதம் முடிவதற்குள் சேமிக்க வழி இல்லாமல் அனைத்தும் கரைந்து விடும்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

5 types of வசியம்

வசியம் க்கான பட முடிவு


வணக்கம்....
வசியம்

வசியம் என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும் அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம்.

1. ராஜவசியம்

தேவைப்படும் நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க வேண்டுமென வசியம் செய்யப்படும்.

2. லோக வசியம்

இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர்.

3. சர்வ வசியம்

இது ஆவிகளை வசீகரித்து வைத்து, காரியங்களையும் செய்யும்படிக்கு செய்யும் வசியமாகும். ஆவிகளை வசீகரப்படுத்தி செய்யும் மந்திரம்

4. மிருக வசியம்

இது மனிதர்கள் தெய்வங்களை வசீகரப்படுத்தப்படுவதைப்போல மிருக ஜீவன்களையும் வசிகரித்தலாகும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் மிகவும் கொடூரமான நாய் இருக்கும் வீட்டில் களவு செய்ய வேண்டுமானால் அந்த நாயிலிருந்து தப்பும் முகமாக அதனை வசப்படுத்தச் செய்யும் வசியமாகும்.

5. ஆண் பெண் வசியம்

இது தமது காதல், திருமணம் என்பன தடைப்பட்டிருப்பவர்கள் ஆண் பெணையோ பெண் ஆணையோ வசியம் செய்து தமது காதல் ஆசையை அல்லது திருமணத்தினை நடாத்தும்படி வசியப் படுத்துவதாகும். இவ்வசியம் செய்யவதற்கு குறிப்பிட்ட நபரினது பாவனைப் பொருட்கள் ஏதேனும் இருந்தால் தான் நல்லது இல்லாவிட்டாலும் வசியம் செய்யலாம். இவ்வசிய முறையானது இரண்டு முறைகளிலே செய்யப்படுகின்றது

1. சாதாரண தரம் 
2. உயர்தரம்

சாதாரண தரம்

இதனைச் செய்ய நாட்கள் சற்று அதிகம் தேவைப்படும் இதற்கான பொருட்கள் சாப்பாடு, விபூதி, எண்ணெய், என்பவற்றைப் பயன்படுத்தி, சாப்பிடக் கொடுத்தால் அல்லது எண்ணெய் உடுப்புகளில் தேய்த்தால் அல்லது தலைமயிரில் தேய்த்தால் இது நாளடைவில் பலனளிக்கும் .இச்சாதாரணதர வசியமானது சற்று செலவு குறைந்தாக காணப்படுகின்றது.

உயர்தரம்

இவ்விசயம் செய்வதற்கு பணச்செலவானது சற்று அதிகமாகும். ஓர் ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் அந்த ஆணின் வலது காலில் ஒரு துளி இரத்தம் எடுத்து, அதனை மந்திர வசியம் செய்வதற்காக பயன்படுத்தும் ஐவகை எண்ணெய், மூலிகையுடன் கலந்து இரவு நேரத்திலே, வசியம் செய்பவரினதும் (யாருக்கு) செய்யும்படி சொன்னாரோ அவரின் பெயரையும் உச்சரித்து, மோகினி ஆவியின் பெயரைக் கூறி ஒரு நாளுக்கு 1008 தடவையாக முறையாக 7 நாட்களுக்கு எந்திரம் வைத்து தேசிக்காய் எடுத்து எண்ணெயின் மேல் கொண்டு போகையில் எண்ணெயில் அசைவுகள் தென்படும். (இது ஆண் செய்ய வேண்டும்) இவ்வெண்ணெயினை பெண் சுண்டு விரல், உடுப்பு, நெற்றியில் வைத்து பார்த்தல், சாப்பாட்டில் கலந்து முதுகில் எந்திரம் வைத்து நினைத்தால் அவளுக்கு அது தெரியும். அப்போது வா என்று கூறினால் அவள் வருவாள். இதுதான் உயர்தர வசியமாகும்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

குபேர பண வரவு உண்டாக



குபேர பண வரவு உண்டாக ரகசிய பரிகாரங்கள்
(share) செய்யுங்கள்)
பச்சை கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும்.
All Spice என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்வசுகந்தியை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் நான்கு மூளையிலும் போட்டு வைக்க பண வரவு உண்டாகும். அடிக்கடி மாற்றி வரவும்.
இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.
புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.
AlfaAlfa எனப்படும் 'குதிரை மசால்' பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது . கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ கூடவே சிறிது எடுத்து செல்லலாம்.
வெந்தயம் சிறுது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.