சனி, 11 ஜூலை, 2015

அனைத்தையும் தீர்க்கும் மாந்திரீக தந்திர ரகசியங்கள்



அனைத்தையும் தீர்க்கும் மாந்திரீக தந்திர ரகசியங்கள்
(share) செய்யுங்கள்)
(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர்சவரம் செய்து வர கடன் வசூலாகும்.
(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும்.
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
(4) நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
(5) பூர்வீக சொத்து கிடைக்க வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வாங்கி வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால் 27 வாரங்கள் (செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
(6) சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும்.
விளக்கு ஏற்றும் விதம்
(7)தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்
(8)வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்
(9)புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய
புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும்
(10)சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும்
(11)பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும்
(12)கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும்
(13)மகாலட்சுமிக்கு பசும் நெய்யிணால் விளக்கு ஏற்ற வேண்டும்
(14)பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
(15)குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
(16)நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும்
(17)நல்லெண்ணெயில் விளக்கேற்றினால் சகல பீடைகளும் விலகும்
(18)விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் உறவு காரர்களால் சுகம் உண்டாகும்
(19)வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்றுவதால் செல்வம் உண்டாகும்
(20)ஐந்து முகம் வைத்து விளக்கேற்ற செல்வத்தைப் பெருக்கும்
கிழக்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் துன்பம் கடன் பகை விலகும்
வடக்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் சர்வ மங்களம் திரவியம் கிட்டும்
மேற்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் கடன் இராது சனி தோஷம் விலகும்
அதிகாலை 03.00 மணிமுதல் அதிகாலை 05.00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றினால் வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்;
வேலை வேண்டுவோர்;நல்ல கணவன் வேண்டுவோர்;
குடும்ப சுகம் புத்ர சுகம் வேண்டுவோர்;
சாயங்கால வேளை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட இப்பலனை அடையலாம்

புதன், 24 ஜூன், 2015

தாந்த்ரீக பரிகாரங்கள் !!! for Govt Jobs




உடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள் !!!

(1) சனிக்கிழமை அன்று காலை 7-8க்குள் அரச மரத்தை 108 முறை சுற்றி பின்பு மரத்தடியில் லக்ஷ்மி படத்திற்க்கு தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து வர பண புழக்கம் அதிகரிக்கும்
(2) செவ்வாய் அன்று வீட்டின் தெற்கு பகுதியில் காலை 6-7 மணிக்கு 7 மண் அகலில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து மனமுருகி வேண்டி வந்தால் பல வருடங்களாக திரும்ப வராத கடன்கள் கூட திரும்ப கிடைக்கும். ஏமாந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும்.நம்பிக்கையுடன் ஒவ்வொரு வாரமும் செய்து வர பலன் தெரியும்.

(3) 7 பல் உள்ள வெள்ளை பூண்டு வாங்கி பற்களை உரித்து 7 காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி நம் வீடு, கடை ஆபீஸ் வாசலில் தொங்க விட்டு தூப தீபம் காட்டி வர வீட்டினுள் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் விரட்டப்படும். மேற்கொண்டு எதுவும் வராது. வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும்.
(4) வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன் அருகம்புல்லின் நுனியை பறித்து பாக்கெட்டில் வைத்து செல்ல, செல்லும் காரியம் வெற்றியை தரும்.
(5) துளசி செடியையும் தொட்டாற் சிணுங்கி செடியையும் ஒரே தொட்டியில் வைத்து வீட்டில் வளர்த்து வந்தால் குடும்ப
சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.

(6) செல்கின்ற வேலை சுலபமாய் முடிய ஆரஞ்சு மரத்தின் வேரை பாக்கெட்டில் வைத்து செல்லலாம்.
(7) மாணவ மாணவியர் படிக்கும் பொழுது இடது கையை மேஜையில் ஊன்றி படிக்க, படிக்கின்ற விஷயம் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். பரிட்சை எழுதும் பொழுதும் இதை கடை பிடிக்கலாம்.
தாந்த்ரீகத்தில் எந்த ஒரு காரியத்திற்கும் உடனடி பலன் தரும் வகையில் யந்திர பிரியோகங்கள் உள்ளன. மிக சக்தி வாய்ந்த இவை, நல்ல பலன் தரும். கணவன்-மனைவி ஒற்றுமை,குடும்ப சண்டை தீர, பண கஷ்டம் விலக, கடன் தொல்லை ஒழிய, காணாமல் போனவர் திரும்ப,நவகிரஹ தாக்கங்களில் இருந்து விடுபட, விபத்து வராமல் இருக்க, திருமணம் நடக்க, வியாபார வெற்றி,குழந்தைகள் ஒற்றுமை, முதலாளியின் கோபத்தில் இருந்து தப்பிக்க, அதிர்ஷ்டம் வர, விரும்பியது கிடைக்க, எதிரிகள் தொல்லை விலக, ரேசில் ஜெயிக்க, விரும்பியவரை கவர, விரும்பியவரை வரவழைக்க,நோய்கள் தீர, அதிகாரம் பெற, கர்ப்பம் தரிக்க, தாய் பால் சுரக்க, செய்வினை அகல, கண் திருஷ்டி அகல, பேய், துஷ்ட சக்திகள் விலக, பைத்தியம் அகல. மேலும் ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்ட யந்திரம் என ஆயிரக்கணக்கில் உள்ளன. அனைத்தும் நம் மகரிஷிகள் அருளியது. நல்ல பலன் கொடுத்து வருகிறது.

அரசு வேலை மற்றும் வேலை கிடைக்க அற்புத பரிகாரங்கள்
(1) அனுமனை, பைரவரை வழிபடுங்கள். சுந்தர காண்ட பாராயணம் செய்யலாம். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு விளக்கேற்றலாம். சனிக்கிழமை காலை 6-7 அல்லது இரவு 8-9 செய்வது சிறப்பு.
(2) தினசரி காலை சூரியனை சூரியன் உதிக்கும் நேரம் பார்த்து வழிபட்டு வரவும்.
(3) 14 முக ருத்திராட்சம் அணியலாம்.
(4) சனிக்கிழமை அன்று ஊர வைத்த எள்ளை மதியம் 1-2 க்குள் எருமைக்கு வழங்கி வரவும்.
(5) அரச மரத்திற்க்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில்
நீர் விட்டு வரவும். அரச மரம் கடவுள் ரூபம். தொடக்கூடாது. மேலும் அரச மரம் அருகில் அசுததும் செய்வது,துப்புவது போன்றவை பெரும் கேடாய் கண்டிப்பாக விளைவிக்கும்.

AURA CLEANSING

AURA CLEANSING க்கான பட முடிவு



ஒளி வட்டத்தை சீராக்க பரிகாரம்
நம்மை சுற்றியிருக்கும் (AURA CLEANSING) ஒளி வட்டத்தை சீராக்க ஆப்பசோடா (BAKING SODA) பரிகாரம் !!
( ஆப்பசோடா நம்மிடம் கிடைக்காது மளிகை கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதை முதலில் தெளிவு படுத்தி விடுகிறேன் !! )
நம் உணர்ச்சிகள், மனம் மற்றும் எண்ணங்களில் தெளிவின்மை, தவறான முடிவுகள் எடுத்தல், உடல் நலம், ஆன்மீக வளர்ச்சி போன்ற அனைத்திற்கும் நம்மை சுற்றியுள்ள ஒளி வட்டத்திற்கும் (AURA) தொடர்புண்டு. மேற்கூறிய எதுவும் சரியில்லை என்றால் அதுவே அந்த ஒளி வட்டத்தின் (AURA COLOUR) நிறமாக தெரியும். அதை சுத்தி செய்வது என்பதை பார்ப்போம். எப்படி காற்றுள்ள இடத்தில் நாம் நின்றாலோ அல்லது நாம் உள்ள இடத்தில் காற்று வந்தோலோ நம் புழுக்கம் மறையுமோ இதுவும் அப்படி தான் !! புற ஒளி வட்டத்தை (AURA) சீர் செய்து நம் எதிர் மறை எண்ணங்களை, நம்மை சுற்றியுள்ள எதிர் மறை சக்திகளை விரட்டுகிறோம் !! அவ்வளவே !! இதுவும் நாம் ஏற்கனவே கூறி பலரால் முயற்சிக்கப்பட்டு பலன் கொடுத்து வரும் 'உப்பு நீர் பரிகார' முறையை போன்றே மிகவும் சக்தி வாய்ந்தது !!! இதற்கு நாள்,கிழமை,நட்சத்திரம்,திதி,நேரம் காலம் எதுவுமில்லை !! எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் !! கிழக்கு முகமாக நின்று மிதமான சூட்டில் உள்ள குளியல் நீரில் சிறிது ஆப்பசோடா எனப்படும் Baking சோடா வை எடுத்து கலந்து உடல் முழுவதும் கைகளை சீப்பு போல் எண்ணி வாறுவது போல் தேக்க வேண்டும். மேலிருந்து கீழ்-பின்பு கீழிருந்து மேல்-3 முறை . அப்படி செய்யும் பொழுது கண்களை மூடி நம் உடலில் உள்ள தீய சக்திகள் நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் விலக தியானித்து கொண்டே செய்ய வேண்டும். முடிந்ததும் அப்படியே 3 நிமிடங்கள் நின்று தியானத்தை முடித்து கொண்டு, பின்பு சகஜமான முறையில் எப்போதும் போல் குளித்து முடிக்கலாம். குளித்து முடித்ததுமே நல்ல மாற்றம் தெரியும். இதை செய்யும் நாளில் ஸோப் உபயோகிக்க கூடாது. வெறும் நீரில் மட்டும் நன்கு குளிக்கலாம். குளித்த அன்றைய தினமே நம் எண்ணங்களில் , நடத்தையில் மாற்றம் தெரியும்.இதை மாதம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும் !! வீட்டில் உள்ள அனைவரும் செய்யலாம். (10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாரடைப்பு வந்தவர்கள், இதய கோளாறு உள்ளவர்களை தவிர)
அடுத்த நாள் முதல் தினசரி "ஹிமாலயன் க்ரிஸ்டல் ராக் ஸால்ட்" உபயோகித்து குளித்து வரலாம். சிறிது தண்ணீரில் கலந்து முதலில் உடலெங்கும் தேய்த்து குளித்து விட்டு பின்பு ஸோப் தேய்த்து குளிக்கலாம். இதை தினமும் செய்யலாம். நல்ல மாற்றம் தெரியும். வாங்க இயலாதவர்கள் கல்உப்பு அல்லது இந்துப்பு உபயோகிக்கலாம் !! 70% மாற்றம் தெரியும் !!

அகோரிகள் - TRUTHS

அகோரிகள் க்கான பட முடிவு



அகோரிகள்
கடவுளை அடைய சில சாதுக்கள் வழக்கத்திற்கு மாறான சில பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரமான இடமாக பிறரால் பார்க்கப்படுகிற இடங்களிலே இவர்கள் வாழ்வார்கள். அதில் ஒன்று தான் மயான பூமி. இவ்வகையான சாதுக்கள் பிணங்களின் சாம்பலை தங்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டு, மனித மண்டை ஓட்டில் பானம் பருகி, மனித தசைகளை உட்கொண்டு வருவார்கள்.
தன்னின மாமிச உண்ணும் பழக்கங்கள், விலங்குகளை பலி கொடுப்பது மற்றும் இதர விந்தையான சடங்குகளை செய்வதற்கு பெயர் பெற்றவர்கள் அகோரிகள். பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் இவர்கள்.
மறுபிறப்பில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடையும் நோக்கில் மற்றும் தன் சுய அடையாளத்தை புரிந்து கொள்ளும் நோக்கில் தான் அவர்கள் வாழ்க்கை பயணிக்கிறது. மாறுபட்ட நிலையிலான மன உணர்வில் வாழ்பவர்கள் இவர்கள். சமுதாயத் தீய பழக்கங்களை வேரறுத்து, இருமை இயல்பற்றதை (அத்வைதா) உணர்வதே அவர்களின் உச்சகட்ட குறிக்கோளாகும்.

இருப்பினும், அகோரிகள் என்பவர்கள் சிவநேத்ராக்களை விட மாறுபட்டவர்கள். சிவநேத்ராக்கள் தீவிர டமாஸிக் பழக்க வழக்கங்களில் ஈடுபடாதவர்கள். சிவநேத்ராக்களும் சிவபெருமானை தான் வழிபடுவார்கள், ஆனால் சட்விக் வடிவத்தில். அகோரி என்ற வார்த்தை அகோர் என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து எடுக்கப் பட்டவையாகும். அதற்கு இருளற்றது என்பதே பொருளாகும்.இயற்கை நிலையிலான உணர்வை உட்குறிப்பவர்களே அகோரிகள். அந்த உணர்வில் பயமோ வெறுப்புணர்ச்சியோ துளியும் இருப்பதில்லை. அதனால் பயம் இல்லாமலும் பாரபட்சம் பார்க்காமலும் இருப்பவரே அகோரி. ADVERTISEMENT அகோரி சாதுக்களைப் பற்றி, அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் நம்பிக்கை ஆகியவைகளை பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாமா?

வழக்கத்திற்கு மாறான, அதிபயங்கரமான சடங்குகள் உலகத்தில் எதுவுமே அசுத்தமில்லை எமனது அகோரிகளின் நம்பிக்கையாகும். சிவபெருமானிடம் இருந்து வந்த அனைத்தும் அவரிடமே செல்கிறது. அதனால் உலகத்தில் உள்ள அனைத்தும் தூய்மையானதே. அழிக்கும் கடவுளான சிவபெருமான் மயான பூமியல் தான் வாழ்கிறார் என நம்பப்படுகிறது. அதனால் தான் மயான பூமிக்கு அருகில் வாழ்கின்றனர் அகோரிகள். எரித்த சடலத்தின் சாம்பல் தான் உலகத்திலேயே தூய்மையானது என அவர்கள் கருதுவதால் அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்வார்கள் அவர்கள். உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதையும், வாழ்க்கை முடிந்தவுடன் அனைத்துமே சாம்பலாகி விடும் என்பதையும் குறிக்கிறது இந்த சாம்பல்.
வழக்கத்திற்கு மாறான, அதிபயங்கரமான சடங்குகள்

இறந்த மனிதர்களின் எலும்புகள் மற்றும் மண்டை ஓட்டை அகோரிகள்பயன்படுத்தி வருகிறார்கள் அகோரிகள். அதனை அணி கலன்களாகவும் கிண்ணமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்சத்திற்காக கங்கையில் வீசப்படும் எஞ்சியிருக்கும் மனித சடலத்தின் எலும்புகளை சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.
புனித நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பாம்பினால் கடிபட்டவர்கள், பிறக்காத சிசுக்கள் போன்றவர்களின் சடலங்களை எரிக்க கூடாது என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும் வழக்கமாகும். அவர்களை கங்கையின் புனித நீரில் மூழ்கடித்து விட வேண்டும். இந்த சடலங்களை பலிபீடமாக பயன்படுத்தி கொள்வார்கள் அகோரிகள். ஏன், இறப்பை நினைவூட்டும் விதமாக அதனை உண்ணவும் செய்வார்கள்.
சிவபெருமான் : உச்ச சக்தி

பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானை உச்ச சக்தியாக நம்புகின்றனர் அகோரிகள். நடக்கும் அனைத்திற்கும் சிவபெருமானே பொறுப்பு, நிபந்தைகள், விளைவுகள் மற்றும் தாக்கங்கள். உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும் சிவபெருமான் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த ஆத்மா அனைத்தும் உலகளாவிய 8 பிணைப்புகளால் (அஷ்டம ஹாபாஷா) மூடப் பட்டிருக்கிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர். சிற்றின்பம், கோபம், பேராசை, மன உறுத்தல், பயம் மற்றும் வெறுப்பே அந்த எட்டு பிணைப்புகலாகும். இந்த பிணைப்புகளை நீக்கும் திசையில் தான் அனைத்து அகோரிகளும் தங்களின் வழக்கங்களை மேற்கொண்டுள்ளனர்.
நம்பிக்கைகள்

சிவபெருமானை மனிதர்கள் உணர்ந்து கொள்ள தடையாக இருக்கும் இந்த 8 பிணைப்புகளையும் நீக்கும் திசையில் தான் அகோரிகளின் அனைத்து வழக்கங்கள் அமைந்திருக்கும். மயான பூமியில் செய்யப்படும் சடங்குகள் மனிதர்களின் மிகப்பெரிய பயமான மரண பயத்தை அளித்திடும். பாலியல் சம்பந்தப்பட்ட சடங்குகள் ஒருவரை சிற்றின்ப எண்ணங்களை நீக்கும். நிர்வாணமாக இருப்பது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுடன் கூடிய அன்பு மற்றும் மன உறுத்தல்களை அழிக்கும். இந்த 8 பிணைப்புகளும் ஆன்மாவை விட்டு நீங்கினால், அவன் சதாசிவாவுடன் சேர்ந்து மோட்சத்தை பெறுவான் என அகோரிகள் நம்புகின்றனர்.
மாய வித்தை நம்பிக்கை

அகோரிகளின் விந்தையான குணாதிசயங்களை பார்த்து, அதனை மாய வித்தையுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர் மக்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர்களிடம் அளவுக்கு அதிகமான இயற்கைக்கு மாறான சக்திகள் உள்ளது. அதற்கு காரணம் நீண்ட காலமாக அவர்கள் செய்து வரும் யோகாசனங்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு மாய வித்தைகளையும் செய்வதில்லை. அவர்களின் சடங்குகளும், பழக்க வழக்கங்களும், மோட்சத்தை அடைவதிலும், சிவபெருமானின் உண்மையான இயல்பை உணர்வதிலுமே அடங்கியிருக்கும்.
யாரை வழிப்படுவார்கள் அகோரிகள்?

சிவபெருமானையும், காளி தேவியையும் வணங்குவார்கள் அகோரிகள். காளி தேவி அல்லது தாரா என்பவர் 10 மகாவித்யாக்களில் (அறிவை கொடுக்கும் கடவுள்கள்) ஒருவராகும். இக்கடவுள் இயற்கைக்கு மாறாக அதீத சக்திகள் கொண்டுள்ள அகோரிகளை மட்டுமே ஆசீர்வதிப்பார்கள். துமாவதி, பகளமுகி மற்றும் பைரவி வடிவில் இருக்கும் இக்கடவுளை இவர்கள் வணங்குகிறார்கள். மஹாகல், பைரவா மற்றும் வீரபத்ரா போன்ற மிகவும் கடுஞ்சினத்துடன் கூடிய வடிவத்தில் இருக்கும் சிவபெருமானையும் வணங்குவார்கள். அகோரிகளின் காப்பாளர் கடவுளாக விளங்குவது ஹிங்க்லஜ் மாதா.
எளிய தத்துவம்

அகோரிகளின் தத்துவப்படி, அவர்களுக்குள் தான் இந்த அண்டம் குடி கொண்டுள்ளது. நிர்வாணமாக இருப்பதால் அவர்களே உண்மையான மனித வடிவின் பிரதிநிதித்துவம். நாம் இந்த கோலத்தில் தான் இந்த உலகத்திற்குள் நுழைகிறோம். அதே போல் இந்த கோலத்தில் தான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறோம். அதனால் நிர்வாணமாக இருப்பதற்கு அவர்கள் வெட்கப் படுவதில்லை. காதல், வெறுப்பு, பொறாமை மற்றும் தற்பெருமை போன்ற உணர்சிகளுக்கு அப்பர்ப்பட்டவர்கள் அவர்கள். அனைத்திலும், ஏன் தூய்மையில்லாத மற்றும் சுத்தமில்லாதவற்றிலும் கூட கடவுள் இருக்கிறார் என்பதே அவர்களின் நம்பிக்கையாகும்.
தவறாக புரிந்து கொள்ளப்பட்டது


அகோரிகள் என்பவர்கள் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர்களை பெரும்பாலும் மாய வித்தைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள் மக்கள். அதற்கு காரணம் அவர்கள் இறந்த சடலங்களுடன் சேர்ந்து வாழ்வதால். ஆனால் அவர்களோ கடவுளை தேடும் காரணத்தினால் தீவிரமான வழிமுறைகளை பின்பற்றி வாழும் புனிதமான எளிய மனிதர்களாகும். குணமாக்கும் சக்தியையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
நோயாளிகளின் உடலில் இருந்து மாசுக்களை நீக்கி மீண்டும் பழைய ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வரும் “உருமாற்றும் குணமாக்கல்” சக்தியை அகோரிகள் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கும் மாய வித்தைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அகோரிகளின் உயரிய நிலையிலான உடல் மற்றும் மனதே, அவர்களுக்கு இவ்வளவு சக்தியை அளித்துள்ளது